×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.63 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்: பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 156 வார்டுகளுக்கு 384 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,76,257 ஆண்கள், 1,87,338 பெண்கள் 57 திருநங்களைகள் என மொத்தம் 3,63,652 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செலுத்த உள்ளனர்.

பகுதி    வார்டு    வாக்குச்சவாடி    ஆண்கள்    பெண்கள்    இதர    மொத்தம்
காஞ்சிபுரம் மாநகராட்சி    51    218    1,07,367    1,15,072    29    2,22,468
குன்றத்தூர் நகராட்சி    30    53    22,448    23,329    15    45,792
மாங்காடு நகராட்சி    27    44    18,307    18,601    7    36,915
வாலாஜாபாத் பேரூராட்சி    15    17    6,385    7, 492    5    14 082
உத்திரமேரூர் பேரூராட்சி    18    27    10,546    11,472    1    22,019
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி    15    25    11,004    11, 372    0    22, 376


Tags : Kangipuram district , 3.63 lakh voters in Kanchipuram district: List released
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு...