×

இயக்குனர் அஸ்வின் திருமணம்

சென்னை: இயக்குனர் அஸ்வின் தனது உதவியாளரை திருமணம்  செய்து கொண்டார். நயன்தாரா நடித்த மாயா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், அஸ்வின் சரவணன். பிறகு எஸ்.ஜே.சூர்யா நடித்த இறவாக்காலம், டாப்சி நடித்த கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் நடிக்கும் கனெக்ட் என்ற படத்தை இயக்குகிறார். இதை நயன்தாரா தயாரிக்கிறார். அஸ்வின் சரவணனுக்கும், அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய காவ்யா ராம்குமாருக்கும் புதுச்சேரியில் எளியமுறையில் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Aswin , Marriage of Director Aswin
× RELATED பெரம்பலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி