×

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கூட்டம் நடந்த அனைத்து நாட்களும் டெல்லியிலேயே தங்கி இருந்தார். உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. இதனால், வைகோ உட்பட தமிழக எம்பிக்கள் சென்னை திரும்பினர்.

இந்நிலையில், திடீரென ஒன்றிய உள்துறை அமைச்சர், தமிழக எம்பிக்களை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார்.இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் டிஆர்.பாலு உட்பட தமிழக எம்பிக்கள் குழு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.இந்த சூழலில், வைகோவுக்கு உடல்நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு காய்ச்சல், சளி இருந்த நிலையில் அவர் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டார்.

இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வைகோ சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் கடந்த 5 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் வீட்டிலேயே தனிமையில் உள்ளார். இதுகுறித்து மதிமுக வட்டாரங்கள் கூறுகையில், ‘கொரோனா தொற்று மூன்றாவது அலையில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். சமீபத்தில் தான் அவர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்’ என்றன.

Tags : Madhyamaka ,General ,Vaiko , Corona to Madhyamaka General Secretary Vaiko
× RELATED சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்:...