×

உள்ளாட்சி தேர்தல் குறித்து தகவல் தெரிவிக்க திமுக ‘வார் ரூம்’

சென்னை: உள்ளாட்சி தேர்தல் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செயல்பாடுகளுக்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து புகார்கள் மற்றும் தகவல்களை திமுக தலைமைக்கு உடனுக்குடன் தெரிவிக்க விரும்பும் திமுகவினர் 88388 09244, 88388 09285 ஆகிய தொலைபேசி எண்ணுக்கும், dmkcentraloffice@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thimuka , DMK 'War Room' to report local elections
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...