×

அதிமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர் நீலாங்கரை முனுசாமி

சென்னை: அமமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி அதிமுகவில் இணைந்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு அமமுக தயாராகி வருகிறது. தனித்துப்போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, டிடிவி.தினகரனின் தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், அமமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி அமமுகவில் இருந்து விலகி நேற்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி அதிமுகவில் சேர்ந்தார்.

Tags : Muhammadu ,Amamuha District ,Nilangar Munusami , AIADMK District Secretary Nilangarai Munusamy joined the AIADMK
× RELATED காலை உணவு திட்டம் குறித்து விமர்சனம்.....