×

கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி-தேவனேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம்: பொதுமக்கள், திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி - தேவனேரி வரை சைக்கிள் பயிற்சி செய்தார்.  வழியில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களை பார்த்து கையசைத்து சிரித்த முகத்துடன் சைக்கிளில் பயணித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் காலையில் சைக்கிளில் பயணம் செய்து வழக்கம். இதில், சுமார் 25 முதல் 30 கி.மீ. தூரம் வரை பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, எதிர்கட்சிகள் குறை கூறாத வகையில் சிறப்பான ஆட்சியும் செய்து வருகிறார்.

இதனை தொடந்து,  தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணியை நேரில் சென்று பார்வையிட்டும், தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியும் வருகிறார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் நேற்று காலை உத்தண்டியில் இருந்து சைக்கிள் பயிற்சியை தொடங்கி கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, வட நெம்மேலி, நெம்மேலி, புதிய கல்பாக்கம், கிருஷ்ணன் காரணை, பேரூர், சூளேரிக்காடு, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான்குப்பம், புது எடையூர் குப்பம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேவனேரி வரை சைக்கிள் பயணம் செய்தார்.

இதில், உத்தண்டியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வழியில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். பதிலுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பார்த்து கையசைத்து உற்சாகம் அடைந்தனர். இதை பார்த்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிரித்த முகத்துடன் சைக்கிளில் பயணித்தார். மேலும், இறுதியில் தனியார் ரிசார்ட்டுக்கு வருவார் என, ரிசார்ட் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அங்கு செல்லாமல், சைக்கிள் பயிற்சி முடித்துவிட்டு, திடீரென காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டார். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்தனர். சைக்கிள் பயிற்சி முடிந்த உடன் முதல்வர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்று ரிசார்ட் நிர்வாகம் அதற்கான ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், தேவனேரி வரை சென்று அங்கிருந்து உடனே காரில் ஏறி சென்றதால்  பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,East Coast Road Uthandi-Devaneri ,DMK , Chief Minister MK Stalin's bicycle ride on East Coast Road Uthandi-Devaneri: Public, DMK volunteers warmly welcome
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...