×

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை

சென்னை :  தமிழகத்தில் பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் கொரோனா குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,SchoolDepartment , பள்ளி, வகுப்புகள்,பள்ளிக்கல்வித்துறை ,ஆன்லைன்
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...