×

ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி ராஜவாய்க்காலில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை அகற்றம்

கரூர்: கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராஜவாய்க்கால் பகுதியில பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி நடைபெற்றது. கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராஜவாய்க்கால் பகுதியில் தூர்வாரப்பட்டு வாய்க்காலில் தங்குதடையின்றி விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமான பெய்ததால் ராஜவாய்க்கால் சில பகுதிகளில் ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்கு இடையூறாக இருந்து வந்தது.

இதுபற்றிய தகவல் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சுமார் 2 கிமீ தூரத்தில் ராஜவாய்க்காலில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரைகள் மற்றும் அடைப்புகளை அகற்றி தண்ணீர் தொடர்ந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.



Tags : Rajavaikkal ,West Panchayat ,Andango , Removal of a knee-jerk azalea at Rajavaikkal in the western panchayat of Andango
× RELATED சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்