×

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் தேர் பவனி: பக்தர்கள் பரவசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நான்கு ரத வீதிகளில் வீதி உலா சென்றது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு வழிபாட்டுத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தன் தளர்வுகளை அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நேற்று முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. பூத்தேரினை ரதவீதிகளில் கொண்டு செல்ல போலீசார் முதலில் அனுமதிக்கவில்லை. பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோயில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பூத்தேர் ஊர்வலத்தினை நான்கு ரத வீதிகளில் நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேரினை நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதே நேரத்தில் நேற்று முன்தினம் இரவு வரை பூத்தேர் கோயிலுக்குள் தான் வலம் வரும். நாங்கள் அதை வீதிகளில் வலம் வராது என பக்தர்கள் நம்பியதால் முன்னேற்பாடாக பூக்கள் மற்றும் தீர்த்தங்களை ஏற்பாடு செய்யவில்லை. இந்நிலையில் திடீரென பூத்தேர் வலம் வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Tags : Dindigul ,Fort ,Mariamman Temple ,Chariot Bhavani , Dindigul Fort Mariamman Temple Chariot Bhavani: Devotees ecstatic
× RELATED திண்டுக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி