மும்பை நட்சத்திர ஓட்டல் மீது நடிகை புகார்

சென்னை: மலையாளத்தில் ஒரு அடார் லவ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். தெலுங்கில் செக் படத்தில் நடித்தார். இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் கோர்காவ்ன் பகுதியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் பிரியா தங்கியிருந்தார். அப்போது ஓட்டலில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி அவர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பிரியா கூறியிருப்பதாவது: மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் எனக்கான இரவு உணவை வாங்கினேன். அதை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றால், அங்கிருந்த ஊழியர்கள் என்னை தடுத்தனர்.

வெளியிலிருந்து கொண்டு வந்த உணவை ஓட்டலுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றனர். எனது அறையில் சென்றுதானே சாப்பிடப் போகிறேன் என சொல்லியும் விடவில்லை. இந்த உணவை ஓட்டலுக்கு வெளியே சென்று சாப்பிடுங்கள். அல்லது குப்பையில் போடுங்கள் என்றனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உணவை வீணாக்க விரும்பவில்லை. வெளியே சென்று சாப்பிட்டு வந்தேன். ஓட்டல் நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயல் எனக்கு வியப்பை கொடுத்தது. இவ்வாறு பிரியா புகார் கூறியுள்ளார்.

Related Stories: