×

திலீப்புக்கு கேரளா ஐகோர்ட் கண்டனம்

திருவனந்தபுரம்: பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசின் திடீர் கோரிக்கையை ஏற்று நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திலீப் தான் பயன்படுத்திய பழைய போன்களை ஒப்படைக்க மறுக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் முன் ஜாமீன் மனு விசாரணையை இன்று (நேற்று) நடத்தவேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகல் இந்த மனுவை நீதிபதி கோபிநாத் விசாரித்தார்.

அப்போது திலீப் தரப்பிற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் கேட்டும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். போனை ஒப்படைக்க மறுப்பது ஏன்? போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் போனை ஒப்படைக்கவேண்டும் என்று கூறினார். திலீப் தரப்பு வழக்கறிஞர், திலீப்பின் பழைய போனை அவரது முதல் மனைவி (மஞ்சு வாரியார்) பேசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அது போலீசிடம் கிடைத்தால் அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்ல வாய்ப்பு உண்டு.

மேலும் போனில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அது வெளியே சென்றாலும் திலீப்புக்கு சிக்கல் ஏற்படும். எனவே இந்த போனை ஒப்படைப்பது குறித்து ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என்று வாதிட்டார். தொடர்ந்து விசாரணை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. பழைய செல்போனை ஒப்படைக்க கோரி குற்றப்பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு நடிகர் திலீப் அனுப்பிய பதில் கடிதத்தில், நடிகை பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் 2017ம் ஆண்டு நான் பயன்படுத்திய செல்போனை, என்னை கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். அந்த போன் தடயவியல் பரிசோதனைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது.

தற்போது ஆஜர்படுத்த கேட்டு கொண்டுள்ள போன்களில் ஒன்று வேறொருவரின் பெயரில் எடுக்கப்பட்டதாகும். சில நாட்களுக்கு முன்பு தான் அதை பயன்படுத்த தொடங்கினேன். இன்னொரு போனை வங்கி தேவைக்கு பயன்படுத்தி வருகிறேன். 3வதாக என்னிடம் ஒரு போன் உள்ளது. அதில் தான் நானும், பாலசந்திர குமாரும் பேசி வந்தோம். அதை எனது வக்கீல் மூலம் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் கேட்டு கொண்டால் அந்த போனை சமர்பிக்கிறேன்.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோசும், பாலசந்திரகுமாரும் பல முறை போனில் பேசி உள்ளனர். 2 பேரும் சேர்ந்து தான் என்னை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே டிஎஸ்பியின் செல்போனை வாங்கி பரிசோதித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று கடிதத்தில் திலீப் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kerala ,iCourt ,Dilip , Kerala iCourt condemns Dilip
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...