புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம்; மேட்டுப்பட்டியில் வடமாடு விழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. சுமார் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி காலை 8 மணிக்கு ரகுநாதபுரம் மந்தையில் துவங்கியது. போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வாடிவாசல் வழியே சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை மிரட்டியது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி வடக்கு காலனியில் வடம் மஞ்சு விரட்டு போட்டி இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் 15 மாடுகள் களமிறங்கின. ஒரு மாட்டுக்கு 10 பேர் வீதம் 150 வீரர்கள் கலந்து கொண்டனர். இதை பார்வையாளர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இருங்களூர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள நடுஇருங்களூரில் சமத்துவ ஜல்லிக்கட்டு  நேற்று நடைபெற்றது. போட்டியில் 450 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.  மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் துவக்கி வைத்தார். முன்னாள் அதிமுக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 450 காளைகள் பங்கேற்றன. விழாவில் சிறந்த காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் எம்எல்ஏ கதிரவன் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: