பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தடை செய்வது பற்றி அறிக்கை தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தடை செய்வது பற்றி அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டோருடன் பிப்ரவரி 18க்குள் கூட்டம் நடத்தி 24ம் தேதிக்குள் அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் கள இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 17 வேகத்தடைகள் உள்ள சாலையில் 2019 முதல் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை உள்ளது என்று அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: