தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் வேட்பாளர் மீது நடவடிக்கை!: திருச்சி ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை..!!

திருச்சி: தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள், பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் ஆட்சியர் சிவராசு குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Related Stories: