பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையே ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்திய-மத்திய ஆசிய இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்று இந்திய-மத்திய ஆசிய முதல் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார். குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக 5 மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காணொலி மூலம் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 5 அதிபர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு நடந்தது. இதில் கஜகஸ்தானின் காசிம்ஜோமார்ட் டோகாயேவ், உஸ்பெகிஸ்தானின் ஷவ்கத் மிர்சியோயேவ், தஜிகிஸ்தானின் எமோமாலி ரஹ்மான், துர்க்மெனிஸ்தானின் குர்பாங்குலி பெர்டிமுஹமடோவ் மற்றும் கிர்கிஸ்தானின் சதிர் ஜபரோவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களிடையே இந்திய பிரதமர் மோடி காெணாலியில் பேசியதாவது: பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா-மத்திய ஆசியா இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். ஆப்கான் நாட்டில் தற்போதுள்ள நிலைமை கவலையளிக்கிறது. இதனால் பிராந்திய பாதுகாப்புக்கு இந்திய-ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையே ஒத்துழைப்பிற்கான ஒரு லட்சிய பார்வையை வரையறுக்க வேண்டும். இதனால், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒருங்்கிணைந்த அணுகுமுறையை கடைபிடிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

முதல் உச்சிமாநாடு குறித்து மத்திய-ஆசிய ஒன்றிய வெளியுறவுத்துறை கூறியதாவது: ‘ இந்தியாவின் விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய ஆசிய நாடுகளுடன் வளர்ந்து வரும் ஈடுபாட்டை பிரதிபலிப்பதாக இம்மாநாடு அமைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: