அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி தீவிரம்: பக்தர்களுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

உத்திரப்பிரதேசம்: அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகாரிகள் வந்தனர். திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதை, சோதனைசாவடியில் ஆய்வு செய்தனர்.

பின்னர் தேவஸ்தான பாதுகாப்பு உயர் அதிகாரி கோபிநாத், திருப்பதி காவல் கண்காணிப்பாளர் வெங்கடஅப்பலனாயிடு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ராமர் கோவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களை சோதனையிடுவது, கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆந்திர போலீசார் மற்றும் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் செயல்பாடு உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்பட்டன. பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்துக்கு வசதி, பக்தர்கள் தாங்கும் வசதி எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.              

Related Stories: