ரேலியா அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்னூர்:  குன்னூர் அருகே உள்ள ரேலியா அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை உள்ள நிலையில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் காவலாளி அமைத்து கண்காணிப்பட்டும் வருகிறது. இருப்பினும் அதனையும் மீறி சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர்.  இளைஞர்கள் அங்கு சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசுவதால் வனங்கள் மாசடைந்தும் வருகின்றன.

எனவே நகராட்சி நிர்வாகம் அங்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துமீறி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அணையினை சுற்றி தடுப்புகள் அமைத்து முறையான காவலாளி கொண்டு கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: