×

திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடுமலை: குடியரசு தின விடுமுறையையொட்டி திருமூர்த்திமலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியவில்லை. நேற்று குடியரசு தின விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தனர். திருமூர்த்தி அணையை பார்வையிட்டனர். பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். நீச்சல் குளத்திலும் சிறுவர்கள் குளித்தனர். அணை கரையோர பகுதியில் பொழுதுபோக்கி சென்றனர்.

திருமூர்த்தி அணையின் கீழ் பகுதியில், சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்க பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆழியாறு, அமராவதி அணைகளில் இருப்பது போல இங்கும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு இடம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பூங்கா அமைக்கும் பணி துவங்கவில்லை. சிறுவர் விளையாட் உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளன. நேற்று திருமூர்த்திமலை வந்த சுற்றுலா பயணிகள், ஓய்வுவெடுக்க பூங்கா இல்லாமல் சாலையோரங்களில் நின்று சாப்பிட்டு சென்றனர். எனவே, விரைவாக பூங்கா அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumurthymalai , In Thirumurthymalai Crowded tourists
× RELATED கொரோனாவால் பக்தர்களுக்கு தடை ஆடி...