×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர், ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 18 மாவட்ட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. வேட்பாளர்களின் பரப்புரை விதிமுறைகள் தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்க வாய்ப்புள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு காவல்துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலானது மின்னணு இயந்திரம் மூலம் நடைபெற உள்ளது. 31,029 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 80,000திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 1,33,000 பேர் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதற்கான பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளனர். வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கான வழிமுறைகளையும் மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. பேரணியோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. வீடு, வீடாக சென்று தான் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். பின்னர் நடைபெற உள்ள மறைமுக தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளை இறுதி செய்யும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் அமைய உள்ளது.

Tags : State , local election
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...