ஜிசிஎஸ் கண்டிகை கிராமம் மேட்டுக்காலனியில் சுடுகாடு அமைக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை

திருவள்ளூர்: ஜிசிஎஸ் கண்டிகை கிராமம், மேட்டுக்காலனி பகுதியில் ஏற்கனவே சடலங்களை அடக்கம் செய்து வந்த இடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் மணவூர் ஜி.மகா, மாவட்ட செயலாளர் புரட்சி ஜெ.ரமேஷ், மாவட்ட தலைவர் பி.ஏ.சதாசிவம் ஆகியோர் திருவள்ளூர் கலெக்டர் மற்றும் திருத்தணி ஆர்டிஓ ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது.திருத்தணி தொகுதி, ஆர்கே பேட்டை ஒன்றியம்,  ஜிசிஎஸ் .கண்டிகை கிராமம் மேட்டுக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள், சாலை ஓரம் உள்ள சுடுகாட்டில் காலம், காலமாக சடலங்களை அடக்கம் செய்து வந்தனர்.தற்போது அந்த இடத்தில் சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். ஜிசிஎஸ் கண்டிகை கிராமம், மேட்டுக்காலனியில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு வேறு இடம் எதுவும் இல்லை. எனவே ஏற்கனவே சடலங்களை அடக்கம் செய்த இடத்தை, எந்த இடையூறும் இல்லாமல் மீண்டும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்களுடன், போது கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் பழனி,  ஆர்கே பேட்டை ஒன்றிய செயலாளர் ஜே.சுரேஷ், என்.சுந்தர் மற்றும் கிராம மக்கள் இருந்தனர்.

Related Stories: