நெட்பிளிக்ஸ், அமேசானுடன் இணைந்து ரூ.400 கோடிக்கு அனுஷ்கா சர்மா ஒப்பந்தம்

மும்பை: ஓடிடியில் படங்கள், வெப்சீரிஸ்கள் தயாரிப்பதற்காக ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்த பிறகு, தொடர்ந்து நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. தனது சகோதரர் கர்னேஷ் சர்மாவோடு இணைந்து கிளின் ஸ்லேட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் என்எச் 10, பரி ஆகிய இந்தி படங்களை தயாரித்தார். பாட்டல் லோக் என்ற வெப்சீரிஸையும் அனுஷ்கா தயாரித்தார். இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றுடன் ரூ.400 கோடிக்கு அனுஷ்கா ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி 18 மாதங்களில் 8 படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை அனுஷ்கா தயாரிக்க உள்ளார். முதலாவதாக சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தை நடித்து தயாரித்து வருகிறார். இது மகளிர் கிரிக்கெட் பற்றிய படமாகும். இதையடுத்து ஃகலா என்ற படத்தையும் மய் என்ற வெப்சீரிஸையும் அவர் தயாரித்து வருகிறார்.

Related Stories: