அஜித் பட ரீமேக் அஜய் தேவ்கன், அக்‌ஷய்குமார் மறுப்பு

மும்பை: அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் மறுத்துள்ளனர். அஜித், நயன்தாரா நடித்த படம் விஸ்வாசம். 2019ல் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் மணிஷ் ஷா வாங்கியிருந்தார். அஜித் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிப்பதற்காக அவரிடம் பேசினார். படத்தை பார்த்துவிட்டு, இந்தி ரசிகர்களுக்கான படமாக இது இருக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது எனக் கூறி அஜய் தேவ்கன் நடிக்க மறுத்துவிட்டார். இதேபோல், அக்‌ஷய்குமாரும் இதில் நடிக்க மறுத்தார். இது குறித்து மணிஷ் ஷா கூறும்போது, ‘விஸ்வாசம் பட ரீமேக்கில் யார் நடிப்பார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் சுமூக முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: