சிதம்பரம் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்

சிதம்பரம்: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். கோயிலுக்குள் தேசிய கொடிக்கு பூஜைகள் செய்து, பின்னர் அதை மேளதாளங்கள் முழங்க கோயிலின் உள்ளே இருந்து கோபுரத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

Related Stories: