×

2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கான விருதாளர்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள்.

* பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத்துக்கு அறிவிப்பு
* சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்துக்கு அறிவிப்பு
* மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கு அறிவிப்பு
* பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கு அறிவிப்பு
* கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கு அறிவிப்பு
* கி.ஆ.பெ. விருது முனைவர் மா.ராசேந்திரனுக்கு அறிவிப்பு
* அருட்பெருஞ்சோதி விருது முனைவர் ரா.சஞ்சீவிராயருக்கு அறிவிப்பு
* இளங்கோவடிகள் விருது  நெல்லைக் கண்ணனுக்கு அறிவிப்பு
* அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸ்-க்கு அறிவிப்பு
* உமறுப்புலவர் விருது நா.மம்மதுக்கு அறிவிப்பு
* தமிழ்த்தாய் விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு அறிவிப்பு
* சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு அறிவிப்பு
* சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கு அறிவிப்பு
* ஜி.யு.போப் விருது ஏ.என்பன்னீர்செல்வத்துக்கு அறிவிப்பு
* மறைமலையடிகள் விருது சுகி.சிவத்துக்கு அறிவிப்பு
* தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரனுக்கு அறிவிப்பு
 
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.120000/ விருந்து ரூ.200,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் விருதுக்காண தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Md. KKA Stalin , 2021, Tamil Development Department, Award, MK Stalin
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு