×

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பனி படர்ந்த இமயமலையின் வியக்க வைக்கும் புகைப்படம்

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து  நாசா விண்வெளி வீரர்கள் எடுத்துள்ள இத்தாலியின் டுரின், பனி படர்ந்த  இமயமலையின் வியக்கவைக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டின் விண்வெளி  ஆய்வு மையமான நாசா, பூமியில் இருக்கும் நிலம், நீர் என பலவற்றின்  அற்புதமான படங்களை அவ்வப்போது வெளியிடும். இதேபோல்், நாசா விண்வெளி வீரர்கள்  செயற்கை்ககோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாகும்.   இ்ந்நிலையில், பூமிக்கு மேல் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வுகள் செய்்து வரும் நாசா விண்வெளி வீரரும்,  பொறியாளருமான மார்க் டி வந்தே  ஹய்,  இமயமலையில் பனிபடர்ந்திருக்கும் தௌிவான அழகிய புகைப்படத்தை அங்கிருந்து எடுத்துள்ளார். ்இதை தனது டிவிட்டரில்  பகிர்ந்துள்ளார். ‘இமயமலையின் இந்த புகைப்படம் தெளிவான, பிரகாசமான நாளில்  எடுக்கப்பட்டது. இது போன்ற காட்சியை என்னால் மீண்டும் பெற முடியாது, என  குறிப்பிட்டுள்ளார். இதேபோல், மற்றொரு நாசா  விண்வெளி வீரரான ஷேன் கிம்பரோ, இத்தாலியில் உள்ள டுரின் நகரத்தை இரவு  நேரத்தில் வசீகரிக்கும் அழகுடன் மிளிரும் புகைப்படத்தை எடுத்து டிவிட்டரில்  வெளியிட்டுள்ளார். ‘இத்தாலியின் மிகப்பெரிய வரலாறு மற்றும் கலாச்சார  சிறப்பு கொண்டது டுரின் நகரம். இந்த வடக்கு  இத்தாலி நகரை, விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  கண்டுபிடிப்பதற்கு எளிமையானது,’ என கூறியுள்ளார், விண்வெளி  வீரர்களின் இந்த புகைப்பட பகிர்வை ஏராளமானோர் கண்டு களித்துள்ளனர். மேலும், ‘இது ஒரு சுவாரஸ்யமான, புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புகைப்படம்,’ என்றும் பாராட்டியுள்ளனர். …

The post விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பனி படர்ந்த இமயமலையின் வியக்க வைக்கும் புகைப்படம் appeared first on Dinakaran.

Tags : Himalayas ,New Delhi ,Italy ,Turin ,NASA ,International Space Center ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...