ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற மாணவி சூழுரை

வேதாரண்யம்: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்று ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற மாணவி ஜெயஸ்ரீ கூறினார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாட்டாகுடியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜெயஸ்ரீ. இவர் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோநேபால் தடகள போட்டியில், ஈட்டி ஏறிதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இந்நிலையில் தலைஞாயிறுக்கு நேற்று வருகைவந்த தங்க மங்கை ஜெயஸ்ரீக்கு வாட்டாகுடி கிராமக்கள் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய, பேருர் திமுக சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் மகாகுமார், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன். ஊராட்சி தலைவர் கற்பதம் நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார். வெற்றிபெற்ற மாணவி ஜெயஸ்ரீக்கு சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் ஆகியோர் நிதியுதவி செய்து போட்டியில் கலந்துகொண்ட மாணவி இதுவரை பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இதுவரை 77 சான்றிதழ்கள் மற்றும் பதத்தம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்லுவதே எனது இலட்சியம் என மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

Related Stories: