கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம், கம்பம் தொகுதி எம்எல்ஏவும், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கம்பம் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தேனி மாவட்டத்தில் 9 டாக்டர்கள், 5 போலீசார், தேவதானப்பட்டி வனத்துறை அலுவலகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் நோய்த்தொற்றுக்கு ஆளான நிலையில், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி மற்றும் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: