திருக்கழுக்குன்றம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை

திருக்கழுக்குன்றம்: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் திமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜாகீர்உசேன், வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள்  பரந்தாமன், எம்.கே.தினேஷ், பேரூர் நிர்வாகிகள் செங்குட்டுவன், வேதகிரி, சரவணன், இளங்கோ, அழகிரி, மோகன்ராஜ், சுரேஷ், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மகளிரணி இணை செயலாளரும், எம்எல்ஏவுமான மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலையில், மதுராந்தகம் பஸ் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளின் படத்துக்கு, அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: