×

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: இந்திய மகாராஜா 2வது தோல்வி

அல் அமராத்: முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், ஓமனில் நடந்து வருகிறது. இதில் இந்திய மகாராஜா, ஆசிய லைன்ஸ், வேல்ட் ஜெய்ன்ட்ஸ் அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். இதில் முதல் 2 இடம்பிடிக்கும் அணி பைனலுக்கு தகுதி பெறும். இந்திய மகாராஜா முதல் போட்டியில், ஆசிய லைன்சை வீழ்த்தியது. 2வது போட்டியில் வேல்ட்  ஜெய்ன்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. நேற்று ஆசிய லைன்சுடன் மீண்டும் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ஆசிய லைன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் குவித்தது. தரங்கா 72(45பந்து), அஸ்கர் ஆப்கன் 69 (28பந்து ரன் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய மகாராஜா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுத்தது. வாசிம்ஜாபர், மன்பிரீத் கோனி தலா 35 ரன் எடுத்தனர். இதனால் ஆசிய லைன்ஸ் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய மகாராஜா கடைசி போட்டியில் நாளை வேல்டு ஜெய்ன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.


Tags : Legends League Cricket Series ,Maharaja of India , Legends League Cricket Series: 2nd defeat of the Maharaja of India
× RELATED சி ல் லி பா யி ன் ட்…