ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கிரெஜிகோவாவை வீழ்த்தி அரையிறுதியில் மேடிசன் கீஸ்

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெர்போர்னில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா (26), 51வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மேடிசன் கீஸ்(26) மோதினர்.

இதில் ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடி காட்டிய அவர் 6-2 என தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். 2015ம் ஆண்டுக்கு பின் மேடிசன் கீஸ் ஆஸ்திரேலியா ஓபனில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

Related Stories: