நாளை 73வது குடியரசு தினவிழா விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு-ரயில், பஸ் நிலையங்களில் சோதனை

விழுப்புரம் : நாட்டின் 73வது குடியரசுதினவிழா நாளை(26ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடியரசு தின விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுதினவிழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகம்முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்பி நாதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். புதியபேருந்துநிலையத்தில் மோப்பநாய் ராணி மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகளைக்கொண்டு பயணிகளின் உடமைகளை போலீசார் பரிசோதனை நடத்தினர்.

அதேபோல், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் சோதனைக்குப்பிறகே பயணிகளை அனுமதிக்கின்றனர். வழிபாட்டுத்தலங்களிலும், மக்கள் கூடுமிடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி:  குடியரசு தினவிழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வகுமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ் உள்ளிட்ட உடமைகளை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி ஆகியோர் மெட்டல்டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பேருந்துகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் பேக்குகள், சூட்கேஸ் ஆகியவையும் வெடிகுண்டு சிறப்புபடை போலீசார் பரிசோதனை மேற்கொண்டனர். அறிமுகம் இல்லாத நபர்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டாம். அதில் சட்டவிரோதமான முறையில் ஏதேனும் வைத்திருக்கலாம். எனவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தினர்.

Related Stories: