குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

திருவள்ளூர்: குடியரசு தினத்தையொட்டி திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வழிப்பாட்டு தலங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ரயில்வே துறையின் மூத்த பாதுகாப்பு கோட்ட ஆணையர் செந்தில்குமரன் உத்தரவின்பேரில் இணை ஆணையர் பிரித் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திருவள்ளூர் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வெடிகுண்டு சோதனை கருவி மற்றும் மோப்ப நாய்களை கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ரயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் ரயில் நிலைய வளாகம், பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், நடைமேடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: