×

5ஜி சேவையை எதிர்த்து வழக்கு நடிகை ஜூகி சாவ்லாவுக்கு 20 லட்சம் அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி:     இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘5ஜி சேவையை கொண்டு வந்தால் தற்போதுள்ள கதிர்வீச்சு விட 100 மடங்கு அதிக கதிர்வீச்சு இருக்கும். அதனால், மனிதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.  மொபைல் போன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சால் தாவரங்கள், விலங்குகளின் டிஎன்ஏ, செல்களில் ஏற்படும் சேதம் எப்படி கேன்சர், சர்க்கரை வியாதி, இருதய நோய்களை உருவாக்குகின்றன என்பதற்கு உரிய சான்றுகள் சமர்பிக்கப்பட்டு உள்ளது,’ என கூறினார்.    இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் கடந்த 2ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி ஜெ.ஆர்.மித்தா நேற்று அளித்தார். அதில், “5ஜி சேவைக்கு எதிரான இந்த வழ்க்கு கண்டிப்பாக பொதுநலம் சார்ந்தது கிடையாது. முழுமையாக சுய விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  மேலும், வழக்கு விசாரணை நடந்த காட்சியை மனுதாரர் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இது கண்டிக்கதக்கது. இருப்பினும், இது போன்ற முகாந்திரம் இல்லாத வழக்கை தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்று தெரிவித்தார்….

The post 5ஜி சேவையை எதிர்த்து வழக்கு நடிகை ஜூகி சாவ்லாவுக்கு 20 லட்சம் அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jugi Chawla ,Delhi High Court ,New Delhi ,India ,Bollywood ,Juki Chawla ,Delhi ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...