தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சியானால் மாணவர்களுக்கு உதவி தொகை ரூ.1000: ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள உயர்கல்விக்கு செல்லும் மாணவ -மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

2022ம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை சுமார் 40 லட்சம் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்தனர்.ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் இம்மாதம் இன்று (25ம் தேதி)  மதியம் முதல் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி படிக்கச் செல்லும் போது அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் பெற முடியும்.  இந்த உதவித் தொகை 4 ஆண்டுகள் வரை கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரிசையில் மதுரை மாவட்டம் 6வது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி 240 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் 269 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கான பாடத்திட்டம் என்பது 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படுகிறது.

Related Stories: