வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் செயல் இழந்து கிடக்கும் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றவாளிகள் குஷி

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செயல் இழந்த நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்து மீண்டும் சரியான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. காவல்துறையினர் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க மிகவும் உதவிக்கரமாக இருப்பது, கண்காணிப்பு கேமராக்கள் தான். ஆகவே தான் காவல்துறையின் மூன்றாவது கண் என்று இந்த கேமராக்கள் அழைக்கப்படுகின்றன.

பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் அனைத்து பகுதிகளிலும் கண்டிப்பாக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். முக்கிய வர்த்தக பகுதிகள், நகை கடைகள், ஜவுளி கடைகள், குடியிருப்பு பகுதிகள், தியேட்டர்கள், பஸ், ரயில் நிலையங்கள் எனற்று பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் தற்போது அவசியமாகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, கன்னியாகுமரி என்று முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பொது மக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் தாங்களாகவே முன் வந்து கேமராக்களை பொருத்த வேண்டும் என்று காவல்துறையினர் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

ஆனால் நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம் ஆகியவற்றில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்த நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் கேமராக்கள் வெறும் காட்சி பொருளாக அமைந்துள்ளன. இரு பஸ் நிலையங்களுக்கும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் பஸ் நிலையங்கள் திகழ்கின்றன.

ஆனால் இவற்றில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்காமல், காட்சி பொருளாக இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இரு பஸ் நிலையங்களிலும் கேமராக்கள் முறையாக இயங்கி கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டது. காலை, மாலை வேளைகளில் போலீசார் கண்காணித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் மாவட்டத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாததால் இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூடப்பட்டன.

கேமராக்கள் மற்றும் உபகரணங்களும் செயல் இழந்தன. இதனால் குற்ற சம்பவங்களில் துப்பு துலக்குவதில் போலீசார் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கஞ்சா வியாபாரிகள், திருட்டு மது விற்பனை கும்பல்கள், விபசார கும்பல்கள், பிக்பாக்கெட் திருடர்கள் ஜாலியாக உலா வருகிறார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக பயணிகளிடம் உடமைகள் திருடப்பட்டு உள்ளன. ஆனால் இதில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் பல சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாத நிலையும் உள்ளது.

எனவே இரு பஸ் நிலையங்களிலும் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் தாங்களாகவே முன் வந்து  கேமராக்களை பொருத்த வேண்டும் என்று காவல்துறையினர் பிரசாரமும் செய்து  வருகிறார்கள். நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம்,  மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம் ஆகியவற்றில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்த நிலையில் உள்ளன.

இந்த பகுதிகளில் கேமராக்கள் வெறும் காட்சி பொருளாக அமைந்துள்ளன. இரு பஸ்  நிலையங்களுக்கும் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் பகுதியாக பஸ் நிலையங்கள் திகழ்கின்றன. ஆனால் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் இயங்காமலும், காட்சி பொருளாகவும் மட்டுமே உள்ளன.

Related Stories: