×

கடல்பசுக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங். எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு..!!

டெல்லி: கடல்பசுக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 ச.கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடல்வாழ் பாலூட்டி விலங்குகளில் தாவரங்களை உண்டு வாழும் ஒரே உயிரினம் கடல் பசு மட்டும் தான். கடல்பசுக்களின் சரணாலயமாக அறிவித்த கடல் பகுதியில் தாவரங்களும் பாதுகாக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லுயிர் பெருக்க திருத்தச் சட்ட மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்து கூறியதாக கூறினார். கடல்பசுப் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைபோல் மேலும் பல நடவடிக்கைகள் தேவை எனவும் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார்.

Tags : Jairam Ramesh , Seaweed, Government of Tamil Nadu, Cong. MP Jairam Ramesh
× RELATED சொல்லிட்டாங்க…