ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் காலின்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்துவருகிறது. இன்று 4வது சுற்று போட்டிகள் நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில், 17ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (26), அமெரிக்காவின் 27ம்நிலை வீராங்கனை டேனியல் காலின்ஸ் (28) மோதினர். இதில் முதல் செட்டை 6-4 என எலிஸ் கைப்பற்றினார். 2வது செட்டை 6-4 என காலின்ஸ் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய காலின்ஸ் 6-4 என கைப்பற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார். ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதிபெற்றுள்ள நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்- செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவா நாளை மோதுகின்றனர்.

Related Stories: