×

பெங்கால்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் டெல்லி-புனேரி இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 73வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் 36-35 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா த்ரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இதில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு 36-31 என்ற புள்ளி கணக்கில் 8வது வெற்றியை ருசித்து பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், இரவு 8.30 மணிக்கு புனேரி பால்டன்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Tags : Bengal ,Jaipur ,Pink Panthers ,Delhi ,Pune , Bengal-Jaipur Pink Panthers clash in Delhi-Pune today
× RELATED ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கு...