×

ஜோலார்பேட்டை அருகே ரயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வேலூர் உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாட்பாரங்களில் ஆங்காங்கே  கடத்த மர்மநபர்கள் மூட்டை மூட்டைகளாக ரயிலில் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்தனர்.

பின்னர், நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் பெங்களூரு செல்லும் ரயிலில் மூட்டைகளை ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் ரோந்து பணியில் இருந்த உணவு பாதுகாப்புத் துறையினர் மூட்டைகளை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். அப்போது, அதிகாரிகளை கண்டதும் 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பிளாட்பாரங்களில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் வாணிப உணவு கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.



Tags : Jolarbate , Jolarpettai: Vellore dinner last night at Somanayakkanpatti station next to Jolarpettai, Tirupati district
× RELATED ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட...