×

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி

புனே: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் தொற்று நோய்வியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது….

The post ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : State of the Union ,Russia ,Pune ,Union ,Corona ,India ,Union Government ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...