தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் www.tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை பார்த்துக் கொள்ளலாம். வரும் 27ம் தேதி முதல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் சேர மொத்தம் 40,288 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார். இந்த விவரங்களை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.in என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம். வரும் 27ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 28, 29ஆம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும், வரும் 30ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கும் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: