×

கிரீன் ரைஸ்

செய்முறை

கடாயில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய  பெரிய வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய புரொக்கோலி, -பச்சை குடைமிளகாய், பட்டாணியைச் சேர்த்து  வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, புதினாவைச் சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீரைச் சேர்த்து பட்டாணி, புரொக்கோலியை வேக விடவும். கலவை நன்கு வதங்கியவுடன் வடித்த சாதத்துடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

குறிப்பு

* புரொக்கோலி மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறனை அதிகரிக்கும் சக்தி கொண்டது. நோய் எதிர்ப்புச் சக்திக்கு உகந்தது. 

Tags :
× RELATED Premium Tea