×

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலியில் சட்டென சரிந்த கேஸ்கள் : உலகளவில் கொரோனா பாதிப்பு 35 கோடியை தாண்டியது!!

வாஷிங்டன்,சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 96 லட்சத்து 83 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 14 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர்.

*அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் சட்டென குறைந்துள்ளது. அங்கு புதிதாக 312,314 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 39,237,264 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*பிரிட்டனில் தினசரி கேஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 15,784,489 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*பிரான்சில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 16,390,818 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*இத்தாலியில் 9,781,191 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 171,263 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : US ,UK ,Italy , கொரோனா ,வைரஸ்,சீனா,தடுப்பூசி
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...