×

நேதாஜியின் சிலை ஜனநாயக விழும்பியங்களையும், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும்; பிரதமர் மோடி பேச்சு.!

டெல்லி: மிக விரைவில் இங்கு கிரானைட் கல்லால் ஆன நேதாஜி சிலை நிறுவப்படும் என நேதாஜி சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் பேசியுள்ளார். இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; நாம் நிற்கும் இந்த இடமும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நேதாஜி பிறந்தநாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்தோம், அதன்படி நேதாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் இன்று டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் திறந்து வைத்தார். நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முப்பரிமாண மின்னொளி வடிவிலான சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சுதந்திர போராட்டத்தில் நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர். கடுமையான சோதனைகளை சந்தித்தபோதும், பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன்னாள் தலைவணங்க மறுத்தார். நேதாஜியின் சிலை ஜனநாயக விழும்பியங்களையும், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவிக்கும். விரைவில் ஹோலோகிராம் சிலைக்கு பதிலாக பிரமாண்ட கிரானைட் சிலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags : Netaji ,PM Modi , Netaji's statue will inspire democratic upheavals and future generations; Prime Minister Modi's speech.!
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...