×

ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து 5 லட்சம் நிலம் மோசடி: ஆசாமி கைது

திருவள்ளூர்: ஆவடி வெள்ளானூர் முப்படை நகரை சேர்ந்தவர் பொன்னிவளவன்(46). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டுமனை வாங்க வேண்டுமென முடிவு செய்து அதற்கான இடம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அறிந்த ஆவடி பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்(43), பொன்னிவளவனை அணுகி தனது உறவினருக்கு சொந்தமான இடம் தொழுவூர் கிராமத்தில் 1780 சதுர அடி கொண்ட நிலம் விற்பனைக்கு உள்ளது. அதனை தான் மேற்பார்வை செய்து வருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் அந்த இடத்தை பொன்னிவளவனுக்கு விற்பதாக தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய அவர் ஜெயக்குமாரிடம் அந்த வீட்டு மனையை பெறுவதற்காக ₹5 லட்சத்தை கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து அவருக்கு அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து பொன்னிவளவன் தொழுவூர் கிராமத்திற்குச் சென்று தான் புதிதாக வாங்கிய இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் இது தனக்கு சொந்தமான இடம் என்று கூறினார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இதன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் கொடுத்தார்.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சூர்யகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி ஆவடி அருகே பதுங்கியிருந்த ஜெயக்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : Asami , Impersonating 5 lakh land scam by producing fake documents: Asami arrested
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...