கும்மிடிப்பூண்டி பஜாரில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜாரில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி பேருராட்சி செயல் அலுவலர் யமுனா, நகரச்செயலாளர் அறிவழகன், மருத்துவ அலுவலர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.தர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாஸ்கரன், இயேசு ரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு, ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பூஸ்டர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.  

அப்போது அவர் பேசியதாவது: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மட்டும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1,27,775 பேர் (86%), 2வது தவணை 85,227 பேர் (57%), 15 வயதில் இருந்து 18 வயது மாணவ, மாணவிகள் 5889 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இன்று(நேற்று) தொடங்கப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி 69 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு செவிலியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும் என அனைவரும் உறுதி ஏற்கவேண்டும், என்றார்.

Related Stories: