×

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்காக ₹24.43 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு ரூ.24.43 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் 718 பூங்காக்கள்  அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.    தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தில்  28பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ.24.43 கோடி ஒதுக்கீடு செய்து  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 23 பூங்காக்கள் ரூ. 18.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட உள்ளன. 5 பூங்காக்கள் ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச் சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Singara ,Chennai ,Kagandeep Singh Bedi , ார 24.43 crore allocation for Singara Chennai 2.0 project: Corporation Commissioner Kagandeep Singh Bedi announces
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...