கமுதி அருகே டிப்பர் லாரி மோதி 56 ஆடுகள் நசுங்கி பலி

கமுதி: கமுதி அருகே டிப்பர் லாரி மோதியதில் 56 செம்மறி ஆடுகள் பலியாகின. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியசாமி (45) மற்றும் நாகராஜ் (40). இவர்கள் செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு இரவில் கிடை அமர்த்துவதற்காக கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் காவடிபட்டி பகுதியில் இரவு 8 மணியளவில் ஆடுகளை ஓட்டி சென்றனர்.

அப்போது அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆட்டு கூட்டத்தில் புகுந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 56 ஆடுகள் நசுங்கி பலியாகின. மேலும் ஆடுகளை ஓட்டி வந்த  நாகராஜ் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: