ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்!: தஞ்சை பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..!!

தஞ்சை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிவுறுத்தலை தொடர்ந்து தஞ்சை பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் டூ மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மாணவியின் தந்தையும், தாயும் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக நாளை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: