×

தென்தாமரைகுளம் அருகே 50 கோழிகளை கடித்து குதறிய வெறி நாய்கள்

கன்னியாகுமரி : தென்தாமரைகுளம்  அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயி. பாரதீய கிசான் சங்கத்தின் மாவட்ட துணைத்  தலைவராகவும் உள்ளார். வீட்டின் அருகில் தனக்கு சொந்தமான இடத்தில் கூடுகள்  கட்டி சுற்றிலும் இரும்பு வலைகள் அமைத்து உயர் ரக மருத்துவ குணம் வாய்ந்த  சுமார் 100 கருங்கோழிகளை வளர்த்து வந்தார்.

கடந்த சில  தினங்களுக்கு முன்பு இரவு ஏதோ மர்ம விலங்கு 50 கோழிகளை கடித்து கொன்று  விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி வீட்டில் தூங்கிக்  கொண்டிருந்தார். அப்போது கோழிகள் சத்தமிடுவது கேட்டு உள்ளது. உடனே எழுந்து  சென்று பார்த்துள்ளார். அப்போது 3 வெறி நாய்கள் கோழிகளை கடித்து குதறிக்  கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் வெறி நாய்களை  விரட்டினார். எனினும் 50 கருங்கோழிகளை வெறி நாய்கள் கடித்துக் குதறி விட்டன.

இந்த மாதிரியான சம்பவங்கள் அந்த பகுதியில்  பல வீடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஊரின் மேற்கு பகுதியில்  அமைந்துள்ள அளத்தங்கரை ரோட்டின் அருகில் சிலர் மாமிசக் கழிவுகளை  கொட்டுகின்றனர். இவற்றை உண்ண நாய்கள் கூட்டமாக வருகின்றன. இந்த வெறி  நாய்களுக்கு அந்த பகுதியில் உணவு கிடைக்கவில்லை என்றால் ஊருக்குள்  புகுந்து கோழிகளை கடித்து குதறி கொன்று விடுகின்றன. எனவே அளத்தங்கரை  ரோட்டில் அதிக அளவில் சுற்றித்திரியும் வெறி நாய்களை ஒழிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tendamaraikulam , Kanyakumari: Periyasamy (64) hails from Chottapanikkan Therivilai near Thendamaraikulam. Farmer. Of the Bharatiya Kisan Sangam
× RELATED தென்தாமரைகுளம் அருகே சொகுசுகார்...